தமிழ் வேட்டுவ குடியினர்(வேட்டுவ கவுண்டர் ,பூலுவ கவுண்டர் )வரலாறு

தமிழ் வேட்டுவ குடியினர்(வேட்டுவ கவுண்டர் ,பூலுவ கவுண்டர் )வரலாறு


                              திணை =குடி ;குலம்


ஆயர் வேட்டுவர் ஆடுஉத்  திணைப் பெயர்
ஆவயின் வருஉம் கிழவரும் உளரே
(தொல்,அகம் 21 )

அருஞ்சொற்பொருள்:
ஆடுஉத் =ஆண் பால் பெயர் ;திணைப் பெயர் =குடிப்பெயர் ;ஆவயின்=முற்கூறிய ;வருஉம்=வரும் ;உளரே =இருக்கிறார்கள்
கிழவர்=உரியவர்

உரை :
ஆயர் குடியை சேர்ந்த ஆண் பெயர் ஆயர் .வேட்டுவ குடியை சேர்ந்த ஆண் பெயர் வேட்டுவர் .ஆயரிலும், வேட்டுவரிலும் உரியவர்கள்( ஆட்சி உரிமை பெற்றவர்கள் (வேட்டுவர் ), ஆட்சி உரிமை பெறாதவர்கள் (ஆயர் )  இருக்கிறார்கள்.

“விளங்குதிணைவேந்தர்களந்தொறுஞ் சென்று” (புறம்.373)
“ஆடுகுடி மூத்தவிழுத்திணைசிறந்த” (புறம்.24)
“வேற்றுமை இல்லாவிழுத்திணைப்பிறந்து” (புறம்.27)
“வசையில் விழுத்திணைப் பிறந்த” (புறம்.159)
“மேம்படவெறுத்தஅவன்தொல்திணை மூதூர்” (மலை.401)
“தெறுவதுஅம்மஇத் திணைப் பிறத்தலே’ (குறுந்.45)
“துளங்குடிவிழுத் திணை திருத்து” (பதிற்,31)
“முன் திணை முதல்வர்போல நின்று” (பதிற்.85)

திணை என்ற சொல் குடி அல்லது குலம் என்ற பொருளில் பயன்படுத்த பட்டது .

திணை என்பது  நிலம்; குலம்;குடி ; இனம்;துறை  போன்ற பொருள்களின் சங்க இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் பயன்படுத்த பட்டது .




ஆயர் வேட்டுவர் ஆடூஉ திணை பெயர் - பொருள். அகத்:21/1 
 

எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல - நற் 59/3
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய - நற் 189/7
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ - நற் 212/1
பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள - நற் 312/4
வேட்டுவன் பெறலொடு அமைந்தனை யாழ நின் - அகம் 28/8
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது - அகம் 36/6
இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய - புறம் 19/5
கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன்/மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள் - புறம் 33/1,2
செல்வ தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன்/தொழுதனென் எழுவேன் கை கவித்து இரீஇ - புறம் 150/7,8
யானை வேட்டுவன் யானையும் பெறுமே - புறம் 214/4
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே - புறம் 214/5
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே - புறம் 252/5
கைம்_மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து என - புறம் 320/3 
 


நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை - மது 116
 காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர்/செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட - பதி 30/9,10
வேட்டுவர் உள்_வழி செப்புவேன் ஆட்டி - கலி 144/21
இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும் - அகம் 270/3
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என - புறம் 152/24
வெட்சி கானத்து வேட்டுவர் ஆட்ட - புறம் 202/1
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் - புறம் 324/3
 
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக - புறம் 205/9
 
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு/வயவர் மகளிர் என்றி ஆயின் - நற் 276/2,3
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ - அகம் 387/9
 கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி - மணி 13/31

கான வேட்டுவன் கடு கணை துரப்ப - மணி 23/114


சங்க காலங்களில் வேட்டுவ குடியினரை வில் எயினர் ,வில் கானவர்,வில்லர் போன்ற சிறப்பு பெயர்களில் அழைக்க பட்டனர் .

சங்க காலங்களில் வேட்டுவ குடியை சேர்ந்த போர் வீரர்களை மழவர் ,மறவர் ,வயவர் ,கூளியர் போன்ற பெயர்களில் அழைக்க பட்டனர் .

சங்க இலக்கியங்களில் 'வேட்டுவர் ' என அழைக்கபட்டவர்களை கல்வெட்டுகளில் 'பூலுவர்என்றும் 'காவலன் ' என்றும் 'வேட்டுவர் ' என்றும் 
'மாவலியர்என்றும் 'வேடர் ' அல்லது 'வேட்டைக்காரன் 'என்றும் அழைக்கபட்டனர்.

வேட்டுவர் என்ற சொல் ஒரு குடி பெயர்.

வேட்டுவ குடியினர் குடிமக்களை களவு .கொலை  ,கொள்ளை போன்றவற்றில் இருந்து பாதுகாத்தனர் மேலும் ஊரையும் ,நாட்டையும் பாதுகாத்தனர் .இதனால் வேட்டுவ குடியினரை காவலன் என்று அழைக்கபட்டனர்.பட்டாலி வேட்டுவ குடியினர் ,கரைய  வேட்டுவ குடியினர்,செம்ப(செம்பிய ) வேட்டுவ குடியினர் போன்ற வேட்டுவ குடிகளை காவலன் என்று அழைக்க பட்டதை கல்வெட்டுகள் கூறுகிறது .

தமிழ் மண்ணின் வட பகுதியில் வாழ்ந்த வேட்டுவ குடியினரை பாணர்கள் (பாணம்(அம்பு ) என்ற சொல்லில் இருந்து வந்த சொல் ) என்று அழைக்கபட்டனர் .இவர்கள் நான்கு வித படைகளிலும் மூர்க்கத்தனமாக போர் புரியும் மா வலிமை படைத்தவர்களாக இருந்தார்கள் .இவர்களை மாவலியர் என்று கல்வெட்டுகளில் அழைக்கபட்டனர்.சாந்தபடை வேட்டுவ குடியினர் ,உரிமைபடை வேட்டுவ குடியினர்,வன்னி வேட்டுவ குடியினர்,பூளை வேட்டுவ குடியினர்,புன்னை வேட்டுவ குடியினர்,வேங்கை வேட்டுவ குடியினர் போன்ற வேட்டுவ குடியினரை பாணர்கள் என்று அழைக்க பட்டதை கல்வெட்டுகளும் ,செப்பேடுகளும் உறுதிப்படுத்துகிறது .

வேட்டுவ குடியினர் தங்களது உணவுக்காக மான் ,முயல்  மற்றும் பறவைகளை  வேட்டையாடி பிடித்தனர் .இதனால் வேட்டுவ குடியினரை வேடர் அல்லது வேட்டைக்காரன் அல்லது வேட்டை சாதி அல்லது வேடுவர் என்று அழைக்கபட்டனர்.

பூமியை ஆளும் வேட்டுவ குடியினரை பூலுவர் என்று அழைக்க பட்டது .குடுமி வேட்டுவ குடியினர் ,வெள்ளை வேட்டுவ குடியினர் போன்ற வேட்டுவ குடிகளை பூலுவர் என்று அழைக்க பட்டது .
பொதுவர் என்ற சொல்லில் இருந்து பூலுவர்  என்ற சொல் வந்ததாக சில ஆய்வாளர்களால் கூறப்படுகிறது .(பொதுவர் -பொலுவர்-பூலுவர்  ).

வேட்டுவ குடியினரை இந்த ஐந்து பெயர்களால் அழைக்கபட்டதால் புராணங்கள் வேட்டுவ குடியில் ஐந்து சாதிகள் இருந்ததாக கூறப்படுகிறது .

வேட்டுவர் இனத்தை பற்றிய கல்வெட்டுகள் :

சங்க இலக்கியங்களில் 'வேட்டுவர் ' என அழைக்கபட்டவர்களை கல்வெட்டு
களில் 'பூலுவர்என்றும் 'காவலன் ' என்றும் 'வேட்டுவர் ' என்றும் 'மாவலியர் 
என்றும் 'வேடர் ' என்றும் அழைக்கபட்டது.

'....காசிப கோத்திரத்து பெரியசெட்டி பிள்ளனுக்கும் செட்டி கேசவனுக்கும் 
 செட்டி சிறுகேசவனுக்கு மற்றொன்றும் ஊராள்மை பூலுவ வேட்டுவரில்  
கேச கன்னனுக்கொன்றும் கண்ணன் பாண்ட வதறையனுக்கும் கோவன் 
 கள்ளைக்கும் ஊராள்மை ஓன்று ..'
(1915:99,கிபி 13,திருமுருகன் பூண்டி )

'...அமர மயங்கற மன்னரையில் பூலுவர் காத்தூண் காணியில் நிலம் இரண்டு 
 மாவும் ..'
(S.I.I Vol-V,No-260, கோவை ,பேரூர் ,கிபி 13)

'.... பெரும்பழனில் இருக்கும் பூலுவன் மேற்செரி வெள்ளைகளில் ராசன்  
நிறை உடையானான தொண்டைமான் ...'
(S.I.I Vol-1,No-338,கிபி 12,பெருமாநல்லூர் )
வெள்ளை (வெள்ளாடு )- வெள்ளை வேட்டுவ கூட்டம்
'ஆய் அம்மன் ' இன்று வெள்ளை வேட்டுவ குலத்தினரின் குல தெய்வம் ஆகும் .

 பல்லடம் ,பொங்கலூர் கல்வெட்டு 'பூலுவ தென் குடும 'என்று கூறுகிறது .
 (கோயமுத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2, பொங்கலூர் கல்வெட்டு
 பாண்டியர்,கிபி 13).

'...பூலுவன் சோழன் மனைக்கு வடக்கு மேற்பக்கெல்லை குடுமி சிறுவன் ..'
 (கரூர் ,வேட்டமங்கலம் கல்வெட்டு,பாண்டியர்,கிபி 13 ).

பூலுவ வேட்டுவ குலத்தை சேர்ந்த சோழன் என்பவனின் நில எல்லைகளும் ,
 குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்த சிறுவன் என்பவனின் நில எல்லைகளும் 
 கூறப்பட்டுள்ளது .கொங்கு மற்றும் கோனாட்டு பகுதிகளில் காணப்படும் 
 கல்வெட்டுகளில் குடும,குடுமி என்ற சொல் குடுமி வேட்டுவ குலத்தை 
 குறிக்கும் .


'...உத்தமசோழ சதுவேதி மங்கலத்து இருக்கும் காவலன் கரையரில் செய 
கங்கனான தம்பிரான் தோழன் ...'
(ஈரோடு பெருந்துறை கல்வெட்டு ,கிபி 13)
கரையர் -கரைய வேட்டுவ கூட்டம்

'ஸ்ரீ மாவலி வாணகோ வலங்கை மீ .ம ..'
(தமபுரி ,அரூர் ,கிபி 8)
'வாணகோ வேட்டுவதி அரையர் ' பற்றி கல்வெட்டு ( ARE 241/1979-80) கூறுகிறது .
ஆனைமங்கலம் என்னும் ஊரை ஆண்ட 'வேட்டுவதி வாணகோவரையார் 'பற்றி கல்வெட்டு (செங்கம் நடுகற்கள் 1971/39) கூறுகிறது .
மேற்கொவலூர் நாட்டை ஆண்ட 'வாணகோவரையார் வேட்டுவதி அரையர் ' பற்றி கல்வெட்டுகள் (செங்கம் ...நடுகற்கள் 1971/45) கூறுகிறது .
'கரும்புறதார்க் கெல்லாம் அரசரான மாவலி வாணாஎன்று காளமேகபுலவர் கூறுகிறார் .( காளமேக புலவர் ,தனிப்பாடல் திரட்டு ,508).
கரும்புறத்தார் -வேடர் .
'...இராகுத்த மிண்டன் சொரிவன்னியர் சூரியன் புவனேக வீரன் பதினெட்டு வன்னியரை முதுகு புரங்கண்டான் காங்கேயனை வென்று கடையில் விலை கொண்டான் வேட்டுமாவலிக்கு விரிந்திடோம் பாண்டியன் ..'
புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-758,திருமெய்யம் ,கி பி 15 )
வேட்டுமாவலிக்கு -வேட்டுவமாவலிக்கு

களப்பிரர் ஆட்சியை நீக்குவதற்காக வேட்டுவ பாளையகாரர்கள் (வெங்கல நாடு ,மணலூர் நாடு ,தலையூர் நாடு ,டி .2967,3074,3039,3037) பெரும் பாணபாடி நாட்டில் இருந்து கரூர் பகுதிக்கு வந்த மாவலியர் பிரிவை சேர்ந்த வேட்டுவ குலத்தவர்கள் (புன்னாடி வேட்டுவ குலம்சாந்தப்படை வேட்டுவ குலம் ) ஆவார்கள் .மேலும் உரிமை படை வேட்டுவ குலத்தவரும் மாவலியர் பிரிவை சேர்ந்தவர்கள் என்று திருவெஞ்சமாகூடல் கல்வெட்டுகள் கூறுகிறது .

'..சோழியன் கரை ஒன்றுக்கும் அந்துவ வேட்டுவரில் சிறுவன் கரை  
ஒன்றுக்கும் மேற்படி நச்சுளி வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும்  
குறுங்காடை வேட்டுவரில் சின்னன் கரை ஒன்றுக்கும் ..'
(ARE No-226 of 1968, ஈரோடு கல்வெட்டு ,கிபி 1538,திருமலை நாயக்கர் )

அந்துவ வேட்டுவர் -அந்துவ வேட்டுவ கூட்டம்
நச்சுளி வேட்டுவர் - நச்சுளி வேட்டுவ கூட்டம்
குறுங் காடை வேட்டுவர் - காடை வேட்டுவ கூட்டம் (குறும்பூழ் -காடை)
போன்ற கூட்ட பெயர்களை கூறுகிறது .
வேட்டுவர் - இன பெயர்

தமிழ் இலக்கணம் :

வேட்டுவர் - இன பெயர்
வேட்டுவன் -ஒருமை ; வேட்டுவர் -பன்மை
வெ -குறில் ; வே-நெடில்
 -குறில் ;வா -நெடில்

கல்வெட்டுகள் ,செப்பேடுகள் ,ஓலை சுவடிகளில் நெடிலுக்கு (வே) பதிலாக  
குறில் (வெ) எழுத்தை பயன்படுத்தினார்கள்.
உதாரணம் :

சேலம் ,ஆத்தூர் கல்வெட்டு (கிபி 13) நில வாளை வேட்டுவ கூட்டத்தை சேர்ந்த  
ராமன் சோழகோன் என்பவர் நீர் பாசனத்தை பெருக்க கிணறு வெட்டியதை 
 பற்றி கூறுகிறது .

அவன் திருச்சி முசிறி கல்வெட்டுகளில் (கிபி 13) 'நிலவாளை வேட்டுவார்என்று கூறபடுகிறான் .இவன் பாண அரசரின்  படை தலைவனாக இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது .
முசிறி கல்வெட்டில் குறிலுக்கு (வ ) பதிலாக நெடில் (வா ) 
 பயன்படுத்தபட்டுள்ளது .

குடுமி வேட்டுவ குலத்தை 'குடுமியார் ' என்று அழைக்கபட்டதை கோனாட்டு  
கல்வெட்டுகள் கூறுகிறது .
வில்லி வேட்டுவ குலத்தை 'வில்லியர் 'என்று அழைக்கபட்டதை கரூர்  
கல்வெட்டுகள்
 கூறுகிறது .


தென்னிந்திய கோயில் சாசனங்கள் தொகுதி -2 ,கரூர் வேட்டமங்கலம் ஊர் கல்வெட்டுபூலுவ வேட்டுவ குலத்தை சேர்ந்த சோழன் என்பவனின் நில எல்லைகளும் , 
குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்த சிறுவன் என்பவனின்  நில எல்லைகளும் கூறப்பட்டுள்ளது .கொங்கு மற்றும் கோனாட்டு பகுதிகளில்  
காணப்படும் கல்வெட்டுகளில் குடும,குடுமி என்ற சொல்  
குடுமி வேட்டுவ குலத்தை குறிக்கும் .




வேட்டுவ இனக்குழுவின் (சாதி ) உட்குழுக்களை (குலம் ) பூலுவன் அல்லது பூவுலன் அல்லது  பூவிலன் அல்லது  பூவிலுவர் என்றும் காவலன் அல்லது  காவன் அல்லது  காவுலவன் என்றும் மாவலியர் அல்லது மாவிலியர் அல்லது மாவுலி அல்லது  மாவலன் அல்லது  மாவுலவர் என்றும் வேட்டுவன் என்றும் வேடர் அல்லது  வேடுவர் அல்லது  வேட்டைக்காரன் என்றும் அழைக்க பட்டனர் .வேட்டுவ இனக்குழுவில் உருவான ஒவ்வொரு உட்குழுவும் தங்களை அடையாள படுத்திக்கொள்ள நாட்டு பெயர் ,ஊர் பெயர்,பறவை பெயர் ,விலங்கு பெயர் ,மலை பெயர் ,தலைவரின் பெயர் ,கடவுள் பெயர் ,செடி ,கொடி,தாவரம் பெயர் போன்ற பெயர்களை வைத்து கொண்டார்கள் .உட்குழுவின் பெயர் குல பெயராகவும் .குல சின்னமாகவும் விளங்கியது .

வேட்டுவ இனக்குழுவில்(சாதி ) ஒரு உட்குழுவினர் (குலம் ) குடுமியான் மலை பகுதியில் இருந்து கொங்கு நாட்டுக்கு வந்தனர் .இவர்களை குடுமியார் ,குடுமர்,குடுமி ,குடுமி குலம் ,குடுமி வேட்டுவன் ,தென்குடுமர்(குடுமியான் மலை கொங்கு நாட்டுக்கு தெற்கே இருப்பதால் இந்த பெயர் வந்தது ) என்று அழைக்க பட்டனர் .

குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்த ஆண்களை    குடுமியார் ,குடுமர்,குடுமி ,குடுமி வேட்டுவன் என்று அழைக்க படுகிறார்கள் .
குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்த பெண்களை குடுமிச்சி என்று அழைக்க படுகிறார்கள்.

இவர்கள் பொங்கலூர் நாட்டு கீரனூர் ,குண்டடம் மற்றும் கரைவழி நாட்டு ஏழூர் ,கொடிகாரை தொழு போன்ற ஊர்களில் வாழ்ந்ததை கல்வெட்டுகள் கூறுகிறது .கீரனூரில் குடுமி வேட்டுவ குலத்தினர் வாழ்ந்தார்கள் என்பதை முத்தூர் பட்டயம் உறுதி படுத்துகிறது .

குடுமி அல்லது  குடுமர்  என்ற சொல்லுக்கும் ,குடும்பர் என்ற சொல்லுக்கும் எந்த தொடர்பும் கிடையாது .        




























http://121.242.207.115/asi.nic.in/important-discoveries-in-tamil-nadu/

HERO-STONE INSCRIPTION, EDUTTAVAYINATTAM, DISTRICT VILLUPURAM
This inscription, engraved on a hero-stone in a field, is in Tamil language and early Vattezhuttu characters of the 6th century A.D. It states that the hero-stone was set up, for one Sami, son of Kambadaru who died in a cattle raid by the Vettuvar of Kadaivenmalaikkodu.





















Comments